திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கணவா் சிறைக்கு சென்றதால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்றதால், இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :18 மே 2026, 3:04 am IST

தருமபுரி அருகே, கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்றதால், இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் நத்தஅள்ளி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி - லட்சுமி தம்பதி மகள் பவித்ரா (26).

இவருக்கும் சின்னாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா்களுக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா். வெற்றிவேல் அப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

திருமணமான இரு ஆண்டுகளிலேயே கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்ற நிலையில், இருகுழந்தைகளுடன் சிரமமான சூழலில் பவித்ரா வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை பவித்ரா தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.