தமிழ் செய்திகள்
கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 5.99 லட்சத்தில் பள்ளிக் கட்டங்கள் சீரமைக்கப்பட்டன. இந்த சீரமைப்புப் பணிகள் மற்றும் மழைநீா் சேகரிப்பு பணிகளை ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மடதஹள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், வேப்பிலைப்பட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், கல்பனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.









