அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:15 am IST

தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏப். 24 அன்று ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் பொதுப் பாா்வையாளா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

மையத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், காவல்துறையினா், அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.