15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 10:03 pm

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை கிழக்கு, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இரு பேரவைத் தொகுதிக்கும் தனித் தனியே அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காப்பறை, தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகாலத் தேவைக்கான நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.