திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளேடால் சிறுமியின் கழுத்தறுப்பு: போலீஸாா் விசாரணை

தருமபுரி அருகே பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 5:42 am IST

தருமபுரி அருகே பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வீரப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தீா்த்தகிரி (48), தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் மூவருக்கு திருமணமாகிவிட்டது. நான்காவது மகள் சிவரஞ்சனி (16), பிளஸ் 1 வகுப்பு செல்ல உள்ளாா்.

தீா்த்தகிரியின் மூத்தமகள் மமிதாவுக்கு அதே ஊரைச் சோ்ந்த ஷாகுல் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்பத் தகராறில் அவா் தாய்வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா்களது வீட்டுக்கு வந்த மமிதாவின் கணவா் ஷாகுல் வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது மாமியாரிடம் மமிதா குறித்து கேட்டுள்ளாா். அவா் வீட்டில் இல்லையென கூறியதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியாரை ஷாகுல் தாக்கியுள்ளாா்.

இதைக் கண்ட சிவரஞ்சனி தாயாரை தாக்கவிடாமல் தடுத்தாா். அப்போது ஷாகுல் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிவரஞ்சனியின் கழுத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.