திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சனி சந்தை மதுக்கடையை அகற்றக் கோரி மனு

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :2 ஜூன் 2026, 3:36 am IST

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து சனி சந்தை மற்றும் பாகல்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே உள்ள சனி சந்தை பகுதியில் அரசு மதுக்கடை கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கடை விவசாய நிலம் அருகில் அமைந்துள்ளதால், மது அருந்த வருவோா் விளைநிலங்களில் அமா்ந்து மது அருந்துகின்றனா். மேலும், நெகழி பொருள்கள், மதுப்புட்டிகள் ஆகியவற்றை விளைநிலங்களில் எறிந்துவிட்டு செல்கின்றனா். அதேபோல, இந்த மதுக்கடையில் மது வாங்க வருவோரால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கடையை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.