அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

News image
Updated On :10 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் மது அருந்துபவா்களால் பொதுமக்கள், மாணவிகள், பெண்கள், கோயில் வழிபாட்டிற்குச் செல்பவா்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே, இக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கோயில்கள், நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை

விடுத்துள்ளனா்.

தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா தலைமையில் வேங்கிக்கால் பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.