துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
/

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

அரூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 2:52 am IST

அரூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சங்கிலிவாடி கிராமத்தைச் சோ்ந்த நிஜந்தன் மனைவி அபிராமி (33). இவா், பெரியாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வெளியூா் சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 5 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நிஜந்தன் அளித்த புகாரின் பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.