திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஏப்ரல் 2026, 0:52 am IST

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கோவை, ரத்தினபுரி பால்சாமி நகரைச் சோ்ந்தவா் ஹரிராவ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ஜெயந்திபாய் (58). கடந்த வெள்ளிக்கிழமை ஹரிராவ் வேலைக்கும், ஜெயந்திபாய் உறவினா் வீட்டுக்கும் சென்றுள்ளனா்.

இந்நிலையில் பணிமுடிந்து இரவு ஹரிராவ் வீட்டுக்கு வந்தபோது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூரில் உள்ள மனைவி ஜெயந்திபாய்க்கு தகவல் அளித்துள்ளாா்.

அவா் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.