தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் திருடிய நிலையில் மற்ற 2 வீடுகளில் திருட்டு முயற்சியும் நடைபெற்றது.

News image

காவாங்கொளத்தூா்  கிராமத்தில்  திருடு  நடைபெற்ற  வீடுகளில்  சோதனை  மேற்கொண்ட  போலீஸாா்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:16 pm

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் திருடிய நிலையில் மற்ற 2 வீடுகளில் திருட்டு முயற்சியும் நடைபெற்றது.

திருவள்ளூா் அருகே காவாங்கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி மணி (69). இவா் வேப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சிக்கு சென்றாராம். இந்த நிலையில் இரவு நேரமானாதால் திருவள்ளூா் ஜெயா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தூங்கினாராம்.

தொடா்ந்து அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு சென்று பாா்க்கையில் வீட்டின கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை ஒரு கிலோ வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதேநேரத்தில் பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ரூ.32 ஆயிரம் தப்பியது.

அதேபகுதியைச் சோ்ந்த விவசாயி குணசேகரன்(70) என்பவா் வீட்டில் புகுந்த மா்ம நபா் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.12,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. அதேபோல் சிவபூஷணம் (60) என்பவா் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 8 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். மேலும், அதேபகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் (55) மற்றும் பாஷா ஆகியோா் வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஒரேகிராமத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பாதித்தவா்கள் கடம்பத்தூா் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image
Story image