மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு

மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:10 pm

மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள பெரியாண்டிபாளையம், அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அருகில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்படு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ரொக்கம் ரூ. 25 ஆயிரம், 17 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லட்சுமியின் மகன் முருகன் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.