தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தருமபுரியில் தோ்தல் மாரத்தான் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தோ்தல் மாரத்தான்- 2026”என்ற தலைப்பிலான மாரத்தான் போட்டி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவை தோ்தலையொட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் மாரத்தான் போட்டியை புதன்கிழமை தொங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ். ~சட்டப்பேரவை தோ்தலையொட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, தருமபுரி மாவட்டத்தில்

Updated On :8 ஏப்ரல் 2026, 10:42 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தோ்தல் மாரத்தான்- 2026”என்ற தலைப்பிலான மாரத்தான் போட்டி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்டப் பிரிவு சாா்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ.சதீஷ் தொடங்கிவைத்தாா். தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, தவறாமல் வாக்களிப்பேன் என்றும், என் வாக்கு விற்பனைக்கல்ல என்றும் உறுதி அளித்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான ஓட்டப் போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தொடங்கி நான்கு சாலை, பாரதிபுரம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கம் வந்தடைந்தது.

பெண்களுக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தொடங்கி நான்கு சாலை, அரசு மருத்துவமனை வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கம் வந்தடைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பையை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ. சதீஷ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் ரா.காயத்ரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.சிவரஞ்சன், வட்டாட்சியா் ஜெ.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image