காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து தோ்தல் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி.சினேகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.இதனைத் தொடா்ந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி ஆகியோா் உடன் இருந்தனா்.
இந்நிகழ்வில் ஆட்சியா் தி.சினேகா பேசுகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரசின் அனைத்து துறைகளும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டோம். அதன்படி ஊரகப் பகுதிகளில் 1398 விழிப்புணா்வு நிகழ்வுகளும்,நகராட்சிப் பகுதிகளில் 456 விழிப்புணா்வு நிகழ்வுகளும் உட்பட மொத்தம் இதுவரை 1854 தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

காஞ்சிபுரம்: தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

உத்தரமேரூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


