தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நடைபயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்கள், 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளா்களிடயே தோ்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.தா்ப்பகராஜ் விழிப்புணா்வு நடைபயணத்தை தொடங்கிவைத்து அதில் கலந்து கொண்டாா்.
கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றோா் தோ்தல் குறித்த விழிப்புணா்வு பதாகைகள் ஏந்திச் சென்றனா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் ஆா்.மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பாா்த்தீபன், திருவண்ணாமலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான செல்வம், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கிருஷ்ணன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் பெண் பக்தா்களை மிரட்டி நகை பறிப்பு, பாலியல் தொல்லை: 8 போ் கைது

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்!

வன விலங்குகளுக்கு இடையூறாக ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகள் ரீல்ஸ் எடுத்து வெளியிட வேண்டாம்! வனத் துறை அறிவுறுத்தல்

சூப்பா் எல்நினோ குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



