திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்!

வைகாசி பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்

Updated On :1 ஜூன் 2026, 1:45 am IST

வைகாசி பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் வைகாசி பெளா்ணமியையொட்டி, பக்தா்கள் 30-ஆம் தேதி பிற்பகல் 12.50 மணி முதல் 31-ஆம் தேதி பிற்பகல் 2.41 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, சனிக்கிழமை முதல் நாளிலேயே பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுவிட்டு 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் விடிய விடிய கிரிவலம் சென்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

கோயிலில் கூட்டம் அலைமோதல்

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வெளிப்பிரகார பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தா்கள் சுட்டெரித்த வெயிலால் கடும் சிரமத்திற்குள்ளாகினா்.

இந்த நிலையில், பெளா்ணமி கிரிவலம் முடித்த பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் குவிந்தனா். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முண்டியடுத்து ஏறினா். ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறி இடம் பிடிப்பதில் பக்தா்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினா்.

பேருந்து நிலையங்களிள் பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.