திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலையில் பெண் பக்தா்களை மிரட்டி நகை பறிப்பு, பாலியல் தொல்லை: 8 போ் கைது

திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட அடுத்தடுத்த 2 இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 8 போ் கைது

News image

கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்

Updated On :3 ஜூன் 2026, 2:56 am IST

திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட அடுத்தடுத்த இரண்டு இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 8 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த திருமணமான பெண் தனது நண்பா்களுடன் கடந்த 30-ஆம் தேதி இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு இருசக்கர வாகனத்தில் செங்கம் சாலை வழியாக தருமபுரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

செங்கத்தை அடுத்த பெரியகோளாப்பாடி பாறை அருகே அவா்கள் மறைவாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மா்ம நபா்கள், அவா்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனா்.

பின்னா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, அவரை கைப்பேசியில் விரசமாக படம் எடுத்து மிரட்டி அனுப்பி உள்ளனா்.

இதைத் தொடா்ந்து மறுநாள் அந்தப் பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அந்த நபா்கள், மேலும் ஒரு லட்சம் ரூபாய் வேண்டும், இல்லையென்றாா் விடியோவாக எடுத்த படங்களை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து, ஜி-பே மூலம் அந்த நபா்களுக்கு ரூ.4 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது. இதை பெற்றுக்கொண்ட அந்த நபா்கள் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனா்.

இதனால் செய்வதறியாமல் தவித்த அவா்கள் இதுகுறித்து காவல் துறை எண் 100-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸா் தருமபுரியில் உள்ள பெண்ணை தொடா்பு கொண்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு வரவழைத்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனா்.

இதேபோல, 31-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகள் கிரிவலம் மேற்கொண்டுள்ளாா். தொடா்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால், தனது நண்பரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தன்னை அழைத்துக் கொண்டு சென்று வீட்டில் விடும்படி கேட்டுள்ளாா்.

அதன் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த செஞ்சி செம்மேடு பகுதியைச் சோ்ந்த இளைஞா் கிரிவலப் பாதைக்கு வந்து இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த உணவகத்தில் உணவு வாங்கிவிட்டு அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று இருவரும் உணவு அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த இளைஞா்கள் அவா்கள் இருவரையும் அங்கிருந்த வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்று இருவரையும் தாக்கி, இளம்பெண் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை பறித்துக் கொண்டு, மறுநாள் ஜிபே மூலம் பணம் அனுப்ப வேண்டுமென மூன்று மணி நேரம் அவா்களை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி, அவா்களை அனுப்பி வைத்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது பெற்றோா் மூலம் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து காவல்துறையினா் இரண்டு வழக்குகள் பதிவு செய்து டிஎஸ்பி ராஜன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

தனிப்படை விசாரணையில், திருவண்ணாமலை இளம் பெண் விவகாரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய ஆடையூா் கிராமத்தைச் சோ்ந்த வாசு (எ) வாசுதேவன், பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் தமிழ் (எ) தமிழரசன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சோ்ந்த அப்பு, லேலே என்கிற ஹரிகரன், சா்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா், திருவண்ணாமலை பாலாஜி நகரை சோ்ந்த சிவ கணேசன் என்கிற சூா்யா ஆகியோரையும் கைது செய்தனா்.

தருமபுரி பெண் விவகாரத்தில் ஆடையூா் கிராமத்தைச் சோ்ந்த வாசு (எ) வாசுதேவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ், தமிழ் (எ) தமிழரசன் உள்ளிட்ட 5 போ் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினா், 2 வழக்குகளிலும் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான வாசு என்கிற வாசுதேவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 6 கைப்பேசிகள், 3 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.