இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:17 am IST

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு தொகுதியில் 29, பென்னாகரம் தொகுதியில் 37, தருமபுரி தொகுதியில் 33, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 22, அரூா்(தனி) தொகுதியில் 19 மனுக்கள் என 5 தொகுதியிலும் மொத்தம் 138 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்புமனுவில் கேட்கப்பட்ட விவரங்கள், இணைப்புகள் ஆகியவை முறையாக உள்ளதா என பரிசீலிக்கப்பட்டதில் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என பாலக்கோடு தொகுதியில் 7, பென்னாகரத்தில் 6, தருமபுரியில் 4, பாப்பிரெட்டிப்பட்டியில் 5, அரூரில் 2 என 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள மொத்தம் 114 வேட்புமனுக்கள் தகுதியுள்ள மனுக்களாக கருதி ஏற்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.