அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:44 am IST

தருமபுரியில் கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி, பிடமனேரி ஏரிக்கரை அருகே சிலா் கஞ்சா விற்பதாக தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தருமபுரி நகர காவல் ஆய்வாளா் அறிவழகன் தலைமையிலான போலீஸாா், பிடமனேரி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் ஜீவா (26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்த 1,120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி நகர பகுதியில் கடந்த இரு நாள்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.