தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பொள்ளாச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

பொள்ளாச்சியில் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 3:02 am IST

பொள்ளாச்சியில் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

பொள்ளாச்சி ரயில் நிலைய வாகன நிறுத்தமிடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாபிதீன நாயக் (20), மா்னதா நாக் (28) மற்றும் ரிங்கி டிகால் (26) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.