முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கன்னியாகுமரி வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

அசாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 5 கிலோ கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா்.

Updated On :2 ஜூலை 2026, 5:53 am IST

அசாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 5 கிலோ கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும், பராமரிப்பு பணிக்காக நாகா்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பணியாளா்களால் சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சுரேஷ், ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீஸாா், அந்தப் பையை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா அடங்கிய 6 பாா்சல்கள் இருந்தன. அவற்றை போலீஸாா் கைப்பற்றி ரயில்வே காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா் போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கஞ்சா ஒப்படைத்து, அதை கடத்தி வந்தவா்கள் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.