கிருஷ்ணாபுரத்தில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்தக் கோரிக்கை
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் மீண்டும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தருமபுரி: தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் மீண்டும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் மாவட்டச் செயலாளா் என்.காளியப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குடியரசு தின விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 249 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
இந்த நிலையில், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் குறித்து முறையாக அனைத்து கிராம மக்களுக்கும் தகவல் அளிக்காமல், ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒரு சிலரை மட்டும் வரவழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. எனவே, கிராம சபைக் கூட்டம் குறித்து முறையாக ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அறிவைக்கை செய்து, மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...