திருப்பூா் தெற்கு பகுதி 140 ஊராட்சிகளில் ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம்
திருப்பூா் மாவட்டம் தெற்கு பகுதியில் உள்ள 125 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டம் தெற்கு பகுதியில் உள்ள 125 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டம் தெற்கு பகுதியில் உள்ள 140 கிராம ஊராட்சிகளிலும் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம வளா்ச்சித் திட்டங்கள், தொழிலாளா் வரவு-செலவு திட்டம், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க திட்டம், ஜல்ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, பொது மக்கள் தங்கள் பகுதிக்கான கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளா்ச்சிக்கான ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...