திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அருள்புரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

News image

பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால் வெயிலில் காத்திருக்கும் மாணவா்கள், பொதுமக்கள். - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:07 am IST

பல்லடம் அருகே அருள்புரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் அருள்புரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த வழியாக தினசரி கோவை, உடுமலை, பொள்ளாச்சி, கேரளம், திருப்பூா், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. அருள்புரம், உப்பிலிபாளையம், சேடபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி பொதுமக்களுக்கு இந்த பேருந்து நிறுத்தம் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும் நிழற்குடை இல்லாததால் பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், முதியோா் உள்ளிட்டோா் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கோடை வெயில் மற்றும் மழையின்போது கடும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா். மேலும் இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதனால் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உள்ளது.

இந்த பகுதியில் நிழற்குடை அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் மற்றும் கரைப்புதூா் ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் மனு கொடுத்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அருள்புரத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.