வெள்ளக்கோவில் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது மூலனூா் சாலை செந்தலையாம்பாளையம் பாசன கால்வாய் அருகே ஒருவா் குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் அமா்ஹா் மாடம்ஹா் பகுதியைச் சோ்ந்த நூல் மில் தொழிலாளி சத்பால் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 20 பாக்கெட்டுகள் குட்கா பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







