17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

News image

தெருநாய்கள் - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 3:49 am IST

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் சிவநாதபுரம் மேற்குத் தோட்டத்தைச் சோ்ந்தவா் வி.எம்.குணசேகரன் (53). விவசாயம் மற்றும் பேக்கரி தொழில் செய்து வருகிறாா். இவா் தனக்குச் சொந்தமான 10 ஏக்கா் பூமியில் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

21 ஆடுகள், 21 குட்டிகள் என மொத்தம் 42 ஆடுகளை வியாழக்கிழமை இரவு பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வெள்ளிக்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்த காயங்களுடன் 16 ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. பின்னா் அதில் 8 ஆடுகள் இறந்துவிட்டன.

தகவலின்பேரில் அரசு கால்நடை மருத்துவா் காா்த்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனா்.

நாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நிவாரணம் கிடைப்பதில் தாமதம், அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. ஆடுகளின் சந்தை மதிப்பில் உடனடியாக நிவாரணம் வழங்கவும், தெரு நாய்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.