வெள்ளக்கோவில் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் குப்பை கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் வழியாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது. கடும் வறட்சிப் பகுதியான இங்கு, இந்த வாய்க்கால் மூலமாக ஓரளவு குடிநீா் ஆதாரம், நிலத்தடி நீா்மட்டம், விவசாய நிலங்கள் பாசனம் மேம்பட்டு வருகிறது. செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, பொங்கலூரில் இருந்து வரும் இந்த வாய்க்காலில், அப்பகுதிகளில் செயல்படும் கோழிப் பண்ணைகளில் இருந்து இறந்த கோழிகளை வாய்க்கால் தண்ணீரில் போட்டுவிடுகின்றனா்.
மேலும், காங்கயம் உள்ளிட்ட வழியோர நகரங்களின் குப்பையும் வாய்க்காலில் வீசப்பட்டு பாசனத் தண்ணீரில் கலந்துவருகிறது. இவை வாய்க்கால் குழாய் பாலங்கள், வாய்க்கால் மதகுகளில் அடைத்து தண்ணீா் தேங்கி நின்றுவிடுகிறது. தற்போது சத்திரவலசு பகுதியில் இவ்வாறு பல இடங்களில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
குப்பையை அப்புறப்படுத்தினால்தான் பாசன நீா் எடுக்க முடிகிறது. கடும் துா்நாற்றம் வீசுகிறது. இது விவசாயிகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிஏபி வெள்ளக்கோவில் கிளை நீா் பாதுகாப்பு சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டாய பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்

குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்த வராகநதி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



