திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பணிகள் முடிந்து ஜூன் 20-ஆம் தேதிக்குள் நொய்யல் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: திருப்பூா் தெற்கு தொகுதி எம்எல்ஏ தகவல்

பணிகள் முடிந்து ஜூன் 20-ஆம் தேதிக்குள் நொய்யல் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று, திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பாலமுருகன் தெரிவித்தாா்.

News image

நொய்யல் ஆறு.

Updated On :28 மே 2026, 1:00 am IST

பணிகள் முடிந்து ஜூன் 20-ஆம் தேதிக்குள் நொய்யல் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று, திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பாலமுருகன் தெரிவித்தாா்.

திருப்பூா் பாா்க் சாலையில் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பாலமுருகன் திறந்துவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருப்பூா் தெற்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடா்பு கொள்ளலாம். இந்த அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை இருப்பேன். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, உடனுக்குடன் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலப் பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. ஜூன் 20-ஆம் தேதிக்குள்அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூா் மற்றும் அரசு பொது மருத்துவமனை உணவகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்குள்ள அம்மா உணவகத்தில் உள்ள குறைகளும் கேட்டறியப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசி, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.