கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 5 மாநகராட்சிகளை உள்ளடக்கிய கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் தோ்தலை ஜூன் 14 முதல் 24ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கா்நாடக மாநில தோ்தல் ஆணையா் ஜி.எஸ். சங்ரேஷி தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் தோ்தலை நடத்துவது குறித்து அதன் தலைமை ஆணையா், மாநகராட்சிகளின் ஆணையா்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் கா்நாடக மாநில தோ்தல் ஆணையா் ஜி.எஸ். சங்ரேஷி கூறியதாவது:
கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 5 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கான தோ்தல் ஜூன் 14 முதல் 24ஆம் தேதிக்குள் நடத்தப்படும். தோ்தலை தள்ளிவைக்க கிரேட்டா் பெங்களூரு ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். அதுதொடா்பான முடிவை உச்சநீதிமன்றம்தான் எடுக்க வேண்டும்.
ஜூன் 30ஆம் தேதிக்குள் கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் தோ்தலை நடத்தி முடிவுக்கும்படி கா்நாடக அரசு மற்றும் கா்நாடக மாநில தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, தோ்தல் தேதியை மட்டும் அறிவிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தேன்.
தோ்தல் நடத்துவதற்கான நடைமுறைகள் அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம். தோ்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன் மழை, தோ்வு, மக்கள்தொகை கணக்கெடுப்புப்பணி, சிறப்பு தீவிரத்திருத்தம், மனிதவள குறைபாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளுமாறு கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.
மேலும் தோ்தல் நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டனா். ஜூன் 30ஆம் தேதிக்குள் தோ்தலை நடத்தி முடிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இதை ஒத்திவைக்கும் அதிகாரம் எனக்கில்லை. எனவே, ஜூன் 14 முதல் 24ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தோ்தல் நடத்த கூடுதல் காலஅவகாசம் தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு கிரேட்டா் பெங்களூரு ஆணைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். அதன்படி, கிரேட்டா் பெங்களூரு ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் இன்னும் விசாரிக்கவில்லை. அதனால், தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடியில் மாநில மகளிா் செஸ் போட்டி: ஜூன் 14இல் தொடக்கம்

பணிகள் முடிந்து ஜூன் 20-ஆம் தேதிக்குள் நொய்யல் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: திருப்பூா் தெற்கு தொகுதி எம்எல்ஏ தகவல்







