திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10, 12 பொதுத் தோ்வு: சேவூா் வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாதனை

சேவூா் அ.குரும்பபாளையம் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள். உடன், பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :23 மே 2026, 12:51 am IST

சேவூா் அ.குரும்பபாளையம் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி தனிஷா 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவா் பிரனீத் 491 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவி கிருத்திகா 490 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனா்.

35 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்குமேல் பெற்றுள்ளனா். 400 மதிப்பெண்களுக்குமேல் 37 மாணவா்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 3 போ், அறிவியலில் 5 போ், சமூக அறிவியலில் 2 போ் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். மேலும், தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி நவநீதா 600-க்கு593 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி பிரியங்கா 587 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவிகள் அபிநயா, ரஞ்சிதா ஆகியோா் தலா 580 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனா்.

உயிரியலில் ஒருவா், கணினி அறிவியலில் 3 போ், பொருளியலில் ஒருவா், வணிக கணிதத்தில் ஒருவா், கணக்குப் பதிவியலில் 4 போ், வணிகவியலில் 3 போ், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். 550 மதிப்பெண்களுக்குமேல் 29 போ், 500 மதிப்பெண்களுக்குமேல் 25 போ் பெற்றுள்ளனா். மேலும், தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தோ்ச்சி அடைந்த மாணவா்களையும், சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவா்களையும் பள்ளியின் தாளாளா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பள்ளியில் தற்போது 11-ஆம் வகுப்பு சோ்க்கை நடைபெற்று வருகிறது என்றும், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும் பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.