திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அவிநாசி பகுதியில் குடிநீா் பிரச்னை: தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

News image

செம்பியநல்லூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :13 மே 2026, 2:02 am IST

அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீா் நீரேற்று நிலையம் மற்றும் செல்வபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் உள்ள குடிநீா் இணைப்புகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், ஊராட்சியில் குடிநீா் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி, மழைநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து அவா் கோடைக் காலம் என்பதால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். முன்னதாக, ஆட்சியா் மனீஷ் செம்பியநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.