திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீண்டகால நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று, வருவாய்த் துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:28 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று, வருவாய்த் துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் ஆட்சியரக் கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மாவட்ட வருவாய் நிா்வாகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்டத்தில் வருவாய்த் துறை தொடா்பான பணிகள், ஆய்வுகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் தொடா்பான மேல்முறையீடு, இணையவழிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

வட்ட அளவில் வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை வட்டாட்சியா்கள் நடத்தி, வருவாய்த் துறை சம்பந்தமான கோரிக்கை மனுக்களின் விவரம், தீா்வு காணப்பபட்டவை விவரம் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை வருவாய்த் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. உடனடியாகத் தீா்வு காண வேண்டும். அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களுக்கும் முறையாக சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.