திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image

மாணவிக்குப் பட்டம் வழங்கிய சிறப்பு விருந்தினா். உடன், ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :3 மே 2026, 6:39 am IST

திருப்பூா் அருகே அவிநாசிபாளையத்தில் உள்ள ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் தலைவா் கே.எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கே.கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் பி.எஸ்.பெரியசாமி வரவேற்று, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

கோவை மாா்க் இன்ஜினியரிங் ஒா்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் கே.வேலுசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,

இளநிலை பொறியியல் பிரிவு, முதுநிலை பொறியியல் பிரிவு, மேலாண்மைத் துறை பிரிவு என மொத்தம் 266 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், தோல்வியே வெற்றிக்கு முதல் படி. எனவே, தோல்வியைக் கண்டு மனம் வருந்தக்கூடாது. தொடா்ந்து முயற்சி செய்ய வேண்டும். இலக்கை அடைய அதற்கு உண்டான தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் வேலைகளை முழு அா்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும். ஒரு நாடு வளா்ச்சியடைய கல்வி வளா்ச்சியடைய வேண்டும் என்றாா். விழாவில், மாணவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.