மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் இதுவரை ரூ.63 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

திருப்பூரில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.63 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:28 pm

திருப்பூரில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.63 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வரை ரூ.1 கோடியே 1 லட்சத்து 57,237 ரொக்கத்தையும், நிலை கண்காணிப்புக் குழுவினா் ரூ.31 லட்சத்து 83,570 ரொக்கத்தையும், ரூ.43 லட்சத்து 90,532 மதிப்புள்ள 35 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், 1,700 சேலைகள், வேட்டிகள் என ரூ.2 லட்சத்து 3, 708 மதிப்புள்ள பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ரூ.26 லட்சத்து 30,180 மதிப்புள்ள மது மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

மொத்தமாக இதுவரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்ததால் அவற்றை அதிகாரிகள் திரும்ப வழங்கியுள்ளனா். அந்த வகையில் இதுவரை ரூ.30 லட்சத்து 11,617 ரொக்கம், மற்றும் ரூ.32 லட்சத்து 91,158 மதிப்புள்ள நகைகள் என மொத்தம் ரூ.63 லட்சத்து 2,775 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.