கரூா் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.40.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட உடனே தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மாவட்டம் முழுவதும் 4 நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் 4 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டனா்.
அவா்கள் தற்போது சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றவா்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 43 ஆயிரத்தி 760 பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், உரிய ஆவணங்களை காண்பித்து ரூ.33 லட்சத்து 92 ஆயிரத்தி 760-ஐ பெற்றுச் சென்றுள்ளனா். இதையடுத்து தற்போது கணக்கில் வராத பணமாக ரூ.6.51 லட்சம் கருவூலங்களில் உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.30 கோடி பறிமுதல்

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


