மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:14 pm

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வந்தது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.