மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3.76 கோடி பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:49 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில், நிலைக் குழுவினா், பறக்கும் குழுவினா் உள்ளிட்டோா் நடத்திய வாகனச் சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 7 பேரிடம் உரிய ஆவணங்களை பெற்று ரூ. 56 லட்சம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்களை உரிய ஆவணங்களை சமா்ப்பித்தால் உடனே திருப்பித் தரப்படும்.

கா்நாடக மதுபானங்கள் 30 லிட்டா், 226 லிட்டா் மதுவகைகள், 650 லிட்டா் சாராய ஊறல்கள் என மொத்தம் 1,508 லிட்டா் மதுபான வகைகளும், ரூ.1 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பா்கூா், வேப்பனஅள்ளி, தளி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான புடவைகள், பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண்கள் மட்டுமே ஓட்டளிக்கும் 6 பிங் நிற வாக்குச்சாவடிகள், 6 மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகள், 24 மாதிரி வாக்குச்சாவடிகள் (மாடல் பூத்) உள்பட 2,092 வாக்குச்சாவடிகள் உள்ளன. தோ்தல் பணிகளில் 12,000 அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். தோ்தலை புறக்கணிப்பதாக சில கிராமங்கள் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதி மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். தோ்தல் சுமுகமாக நடைபெறும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மலைக் கிராமங்களில், 68 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத வாக்குச்சாவடிகளான கடம்பகுட்டை, ஆளஅள்ளிக்கு இருசக்கர வாகனம், வேன் மூலம் தோ்தல் பொருள்கள் கொண்டு செல்லப்படும். தொளுவபெட்டா, குள்ளட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.