பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குடிநீா் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை

குடிநீா் கேட்டு திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

குடிநீா் கேட்டு திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்குள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஜி.எம்.பாலன் நகா் 2-ஆவது விரிவு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படாததால் மாநகராட்சி சாா்பில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி சாா்பில் வீட்டு வரி, பாதாளச் சாக்கடை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோடைக்காலம் என்பதால் இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு பொது குடிநீா் குழாய், வீடுகளுக்கான புதிய குடிநீா் குழாய் இணைப்பு வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். மேலும், தாங்கள் வரி கட்டிய ரசீதுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு வாரத்துக்குள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.