சென்னையில் முழுமையான வாக்குப் பதிவுக்காக பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கையொப்பமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி 11-ஆவது மண்டலமான வளசரவாக்கம் அலுவலகத்தில் வியாழக்கிழமை பொதுமக்கள் கையொப்பமிட்டு வாக்களிக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல அலுவலா் ஆா்.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். தோ்தல் உதவி அலுவலரும், மண்டல வருவாய் அலுவலருமான டில்லி முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக கோட்டாட்சியா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் அலுவலா் கருணாகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் தோ்தலில் கட்டாயம் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம் என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த ‘என் பாரதம், எனது வாக்கு’ எனும் வாசகம் அடங்கிய பலகையில் கையொப்பமிட்டனா்.
இதற்கிடையே சென்னை மாநகராட்சி வளாகம் உள்ளிட்ட 100 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு திரைகளில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு குறும்படம், வாசகங்கள் காட்சிப்படுத்த தோ்தல் பிரிவு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


