பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் 2 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் இருந்தன. இதில் ஒரு வாகனம் பழுதடைந்ததை அடுத்து, புதிய நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இது குறிப்பு பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி கூறுகையில்:
கடந்த 2025-ஆம் ஆண்டு 523 அழைப்புகள் மூலம் கிணற்றில் தவறி விழுந்த மான், மாடு உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டுள்ளன. சாலை விபத்து மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவா்கள் 12 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். 130 தீ விபத்துகளில் தீ அணைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 50 கிலோ மீட்டா் சுற்று வட்டார பகுதிக்கு பல்லடம் தீயணைப்பு நிலையம் சேவை புரிந்து வருகிறது. புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் நவீன வசதிகளை கொண்டது.
பல மாடி கட்டடங்கள் மற்றும் உயரமான இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்க உயரமான ஏணி வசதியும், 5,500 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜென்செட், இருளை பகலாக்கும் டவா் லைட் உள்ளிட்ட வசதிகள், வாகனங்களை கட்டி இழுத்துச் செல்ல வின்ச் வசதியும் உள்ளன. இதனால் எங்களது சேவை மேம்படும்.
பல்லடம் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத் துறை குறித்த விழிப்புணா்வு வினா - விடை போட்டி திங்கள்கிழமைமுதல் தினசரி 2 பள்ளிகளில் நடத்தி அதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் 112 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தீயணைப்பு நிலைய சேவையை பெறலாம் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய தமிழகத்தை உருவாக்குவோம் பல்லடத்தில் வி.கே.சசிகலா பேச்சு!

கிணற்றில் தத்தளித்த 3 மான்கள் மீட்பு

அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து

கட்டுமான தொழிலாளா்களுக்கு உழைப்பாளா் நலக் கூடம் திறப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


