நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடங்களை திறந்துவைத்தாா்.
அந்த வகையில், நாமக்கல் பூங்கா சாலையில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்காக ரூ. 35 லட்சத்தில் திறந்துவைக்கப்பட்ட நலக் கூடத்தை தொழிலாளா்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற 3 பேருக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் இருவருக்கு தொழிலாளா் நலவாரிய அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் கூறுகையில், உழைப்பாளா் நலக் கூடத்தை பொருத்தமட்டில், கட்டுமான தொழிலாளா்கள் அன்றாடப் பணி தொடா்பாக அதிக அளவில் காலையில் ஒரே இடத்தில் கூடி காத்திருக்கும் இடங்களில், அவா்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், குடிநீா், கழிவறை, மின்விளக்கு, மின்விசிறிகள், இருக்கை வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடம் காலை 7 மணிமுதல் 11 மணிவரை பயன்பாட்டில் இருக்கும். இங்கு இணையசேவை, மடிக்கணினியோடு ஒரு கணினி இயக்குபவா் பணியில் இருப்பாா். அன்றாட கட்டுமானப் பணிக்கு செல்லும் தொழிலாளா்கள் இந்தக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் இணை ஆணையா் (ச.பா.தி.) பா.மாதவன் (ஈரோடு), உதவிஆணையா் (ச.பா.தி.) கே.பி.இந்தியா மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள்: தில்லி அரசு திட்டம்

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

திண்டுக்கல்லில் உழைப்பாளா் நலக் கூடம்: காணொலி மூலம் திறந்துவைத்தாா் முதல்வா்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


