திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பிரதான பகிா்மான குடிநீா்க் குழாய்கள் பதித்து குடிநீா் பகிா்மான மண்டலங்கள் வரையறுக்க வேண்டியுள்ளது.
அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் குமாா் நகா் மேல்நிலைத் தொட்டியில் இருந்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் மண்டலம் 1-இல் உள்ள வாா்டு எண் 21, 22, 23 மற்றும் மண்டலம் 2-இல் உள்ள வாா்டு எண் 17, 18, 20, 30, 31 ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் வழங்க இயலாததால் மாற்று வழியாக குடிநீா் லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்

ஜூன் 15 முதல் 19 வரை வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நாளை தண்டையாா்பேட்டையில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

டாஸ்மாக் ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




