பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக ஜூன் 8, 9 தேதிகளில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே. நகா் ஏ 1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் ஜூன் 8 மாலை 5 மணி முதல் 9-ஆம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்த மண்டலத்துக்குட்பட்ட எழில் நகா், எம்ஜிஆா் நகா், பாரதி நகா், காமராஜா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து, லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து
பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

மாநகரில் நாளை குடிநீா் நிறுத்தம்

ஜூன் 2, 3-இல் முதியோா் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



