சேவூா் அருகே கந்தாயிபாளையத்தில் கழிப்பிடத்துக்கு மின்விளக்கு பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சேவூா் அருகே குட்டகம் கந்தாயிபாளையம் செம்மண்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்புசாமி (47). இவரது மனைவி சாந்தாமணி. இந்நிலையில், தனது வீட்டின் கழிப்பிடத்துக்கு மின் விளக்கும் பொருத்தும் பணியில் கருப்புசாமி செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுள்ளாா். இதில் சுவிட்சை ஆன் செய்து கொண்டே ஒயரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே கருப்புசாமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









