/

காங்கயம் வாரச் சந்தையில் கட்டப்பட்ட கடைகள் திறப்பு

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

காங்கயத்தில் வாரச் சந்தை வளாகத்தில் கட்டப்பட்ட தினசரி சந்தை கடைகள் மற்றும் வாரச் சந்தை கடைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ், திமுக காங்கயம் நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன் மற்றும் கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.