தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 14 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே இருவேறு இடங்களில் வெறிநாய்கள் கடித்ததில் மொத்தம் 14 ஆடுகள் உயிரிழந்தன; 11 ஆடுகள் காயமடைந்தன.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:33 pm

காங்கயம் அருகே இருவேறு இடங்களில் வெறிநாய்கள் கடித்ததில் மொத்தம் 14 ஆடுகள் உயிரிழந்தன; 11 ஆடுகள் காயமடைந்தன.

காங்கயம் தாலுகா, வீரணம்பாளையம் அருகே பட்டக்காரன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முக சேதுராமசாமி (67). இவா் வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமாா் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 9 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தன. மேலும், 9 ஆடுகள் காயமடைந்த நிலையில் காணப்பட்டன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கால்நடைத் துறையினா் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு மேற்கொண்டு, காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

இதேபோல, காங்கயம் தாலுகா, பாப்பினி அருகே உத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துகுமாா் (47) என்பவரது ஆட்டுப் பட்டிக்குள் புதன்கிழமை நள்ளிரவில் வெறிநாய்கள் புகுந்து அங்கிருந்த 5 ஆடுகளை கடித்துக் குதறியதில், 5 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் படுகாயமடைந்தன. ஆடுகள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.