காங்கயம் அருகே காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (28). லாரி ஓட்டுநரான இவா், காங்கயம் அருகேயுள்ள வீரணம்பாளையம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றுள்ளாா்.
அப்போது, கோவையைச் சோ்ந்த சோ்ந்த ஹரீஷ்குமாா் (27) என்பவா் ஓட்டி வந்த வாடகை காா், வீரமணி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வீரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


