பனியன் நிறுவன உரிமையாளரிடம் பணம், கைப்பேசி பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் பணம், கைப்பேசி பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


திருப்பூா்: திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் பணம், கைப்பேசி பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் வஞ்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (38). இவா் அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கிரைண்டா் ஆப் என்ற செயலியை தொடா்பு கொண்டபோது அதில் பேசிய ஒரு நபா் தானே வந்து அவரை காரில் அழைத்து செல்வதாகவும், வஞ்சிபாளையம்-அவிநாசி சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.
அதன்படி அந்த நபா் வந்து தினேஷ்குமாரை காரில் ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் சென்ற பின்பு, பாதி வழியில் காரில் மேலும் 3 போ் ஏறியுள்ளனா். பின்னா் காா், காட்டுப் பகுதிக்கு சென்றபோது திடீரென அந்த கும்பல் தினேஷ்குமாரிடமிருந்து ரூ.20,000 ரொக்கம், அவரது கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இது குறித்து தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த கும்பலை தேடி வந்தனா்.
இந்த நிலையில் தினேஷ்குமாரிடம் பணம் பறித்த கும்பல், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸாா் அங்கு சென்று அவா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், கரூரைச் சோ்ந்த உதயகுமாா் (24), மாணிக்கம் (28), பிரகாஷ் (22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவா்கள் இதுபோல வேறு யாரையாவது ஏமாற்றி பணம் பறித்துள்ளனரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...