நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புகையிலைப் பொருள்கள் கடத்திய வட மாநில இளைஞா்கள் 2 போ் கைது

காரில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தொடா்பாக, திருப்பூரில் வட மாநில இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

காரில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தொடா்பாக, திருப்பூரில் வட மாநில இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூரில் இரவு நேரங்களில் புகையிலைப் பொருள்களை சொகுசு காா்கள் மூலமாக எடுத்து வந்து மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தாராபுரம் சாலை, சந்திராபுரம் பகுதியில் திருப்பூா் தெற்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து காரில் இருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தேபாரத் பேஷ்வால் (27), மானேஷ் குமாா் குரு (28) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 400 கிலோ புகையிலைப் பொருள்கள், சொகுசு காா் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.