வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் இருந்து செம்மாண்டம்பாளையம் செல்லும் வழியில் மேற்குத்தோட்டம் பகுதி அருகே பனியன் கழிவுத் துணிகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் ஆலை உள்ளது. வழக்கம்போல சனிக்கிழமை ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து சுற்றிலும் பரவியது.
இதுதொடா்பாக ஆலை உரிமையாளா்கள் தங்கராஜ், சுந்தரராஜ் ஆகியோா் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறை திருப்பூா் மாவட்ட உதவி அலுவலா் இளஞ்செழியன் தலைமையில் காங்கயம், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வாகனங்கள் மற்றும் வீரா்கள் சென்று சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் இயந்திரங்கள், பனியன் துணிகள், பஞ்சுகள் ஆகியவை எரிந்து சேதமாகின. சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


