வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கொப்பரை பருப்பு எரிந்து சேதமானது.
வெள்ளக்கோவில், அண்ணா நகரில் பொன்பிரபு என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு 60-க்கு 40 அடி அகல கட்டடத்தில் சிறிய அளவிலான இயந்திரம் மூலமாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாா் செய்யப்பட்டு வருகிறது. கட்டடத்தின் ஒரு பகுதியில் தேங்காய் பருப்புகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து ஆலை முழுவதும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசாமி தலைமையிலான வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இருப்பினும் இயந்திரம் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் காயம்

மாட்டுப் பண்ணையில் தீ விபத்து : 3 மாடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


